செபமாலை மறைபொருள்கள்

மகிழ்ச்சி மறைபொருள்கள்

கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்தது. (லூக்கா 1:30,38 – வரம்:தாழ்ச்சி)

மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தது. (லூக் 1:41-42 – வரம்:பிறரன்பு)
இயேசுவின் பிறப்பு. (லூக் 2:6-7 – வரம்: எளிமை)
இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது. (லூக் 2:22 – வரம்:பணிவு)
காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்தது. (லூக் 2:49-50 – வரம்:அவரை எந்நாளும் தேடி நிற்க)

ஒளியின் மறைபொருள்

இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றது. (மத்தேயு 3:16-17 – வரம்:குணப்படுத்தும் ஆவியானவர்)
கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது. (யோவான் 2:11 – வரம்:நம்பிக்கை)
இயேசு இறையரசை பறைசாற்றி, மனந்திரும்ப அழைத்தது. (மாற்கு 1:14-15 – வரம்:மனம்மாற்றம்)
இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்தது. (மாற்கு 9:3,7 – வரம்:புனிதம்)
இயேசு இறுதி இரவுணவின்போது நற்கருணையை ஏற்படுத்தியது. (மத்தேயு 26:26-28 – வரம்:ஆராதணை)

துயர மறைபொருள்கள்

இயேசு இரத்த வியர்வை சிந்தியது. (மத்தேயு 26:42 – வரம்:பாவங்களுக்காக மனத்துயர் அடைய)
இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டது. (மாற்கு 15:15 – வரம்:புலன்களை அடக்கி வாழ)
இயேசு முள்முடி தரித்தது. (மத்தேயு 27:29-30 – வரம்: ஒறுத்தல், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்க)
இயேசு சிலுவை சுமந்து சென்றது. (யோவான் 19:16-17 – வரம்: வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழ)
இயேசு சிலுவையில் அறையப்பட்டது. (யோவான் 19:30 – வரம்:இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும்)

மகிமை மறைபொருள்கள்

இயேசு உயிர்த்தெழுந்தது. (மத்தேயு 28:5-6 – வரம்:உயிருள்ள விசுவாசத்துடன் வாழ)
இயேசுவின் விண்ணேற்றம். (லூக்கா 24:50-51 – வரம்:நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேட)
தூய ஆவியாரின் வருகை. (திருப்பாடல் 2:4 – வரம்: ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற)
இறையன்னையின் விண்ணேற்பு. (திருவெளிப்பாடு 12:1 – வரம்:நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற)
இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றது. (லூக்கா 1:49,52 – வரம்:அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + fifteen =