சென்னை விமான நிலையத்தில் மலேசியப் பெண் கைது

மலேசியாவிலிருந்து சென்னை சென்ற ஒரு பெண்மணி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள (14 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி) தங்கத்தை கடத்தியதன் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தகவல் கிடைத்ததன் பேரில் கடந்த ஞாயிறன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த அந்த 41 வயது பெண்மணியின் பயணப் பெட்டிகளை சோதனையிட்ட அதிகாரிகள் 6.5 கிலோ எடையுள்ள 12 தங்கப் பாளங்களை கைப்பற்றினர். தகவல் கிடைத்ததன் பேரில் கடந்த ஞாயிறன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த அந்த 41 வயது பெண்மணியின் பயணப் பெட்டிகளை சோதனையிட்ட அதிகாரிகள் 6.5 கிலோ எடையுள்ள 12 தங்கப் பாளங்களை கைப்பற்றினர்.
விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்கும் அடையாளம் தெரியாத நபரிடம் இதை தாம் ஒப்படைக்கவிருந்ததாக அந்தப் பெண்மணி விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரியிடம் தெரிவித்தார்.
சென்னையிலுள்ள மலேசியத் தூதரக அதிகாரி கே.சரவணன் பேசுகையில், விமான நிலைய அதிகாரிகள் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றார். கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இதேபோல் 13 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள வைரங்களைக் கடத்திச் சென்ற ஒரு மலேசிய ஆடவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 18 =