சென்னையில் 2 நாட்களுக்கு வெப்ப காற்று வீசும்- வானிலை அதிகாரி தகவல்

0

சென்னையில் நேற்று 106 டிகிரி வெயில் தாக்கியது. அனல்காற்று அதிகமாக வீசியதால் சாலைகளில் மக்களால் செல்ல முடியவில்லை. வாகனங்களில் சென்றவர்கள் இந்த வெப்பக்காற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


இந்த வெப்பக்காற்றும் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை மண்டல வானிலை துணை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

புயல் காரணமாக சென்னையில் வடகிழக்கு காற்று வீசியது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. தற்போது. மேற்கு திசையில் இருந்து காற்று வீசுகிறது. இது வெப்பக்காற்றாக வீசுகிறது.

கடலின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடுவதால் இதன் தாக்கம் அதிகமாக தெரிகிறது. இந்த சூடான காற்று மேலும் 2 நாட்களுக்கு வீச வாய்ப்புள்ளது. அதன் பின்னர் படிப்படியாக குறையும். இந்த காலத்தில் வெப்பத்தின் தாக்கம் 41 டிகிரி செல்சியஸ் வரை வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 12 =