சென்னையில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழை; கிடுகிடுவென உயரும் ஏரிகளின் நீர்மட்டம்

0

சென்னை: 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, பூழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பூண்டி ஏரியின் நீர் இருப்பு ஒரே நாளில் 208 மில்லியன் கனஅடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 2,242 கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 8 மில்லியன் கனஅடியாகவும், புழல் ஏரியின் நீர் இருப்பு 27 மில்லியன் கனஅடியாகவும் உயர்ந்துள்ளது.

இதே போல் சோழவரம் ஏரியின் நீர்இருப்பு 30 மில்லியன் கனஅடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 347 கனஅடியாக உள்ளது. வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சியானது வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதால், வட தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 220 மிமீ  மழை பதிவாகியுள்ளது. ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த அளவுக்கு அதிமாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நேற்று இரவு முன்தினம் முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர்  பாதிக்கப்பட்டனர். மாலையிலும் மேகமூட்டம் உருவாகி இரவில் மழை பெய்தது. வளிமண்டல காற்று சுழற்சி கடலோரப் பகுதியில் நிலை இருப்பதால் வட தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கு நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =