சென்னையில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

0

சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 


அப்போது சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு 40,000 நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கபட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் கூறினார். 
அதே போல, எந்தெந்த பகுதிகளில் வியாபாரம் செய்ய முழு நேரமும் அனுமதி, எங்கு பகுதி நேர அனுமதி, எங்கு அனுமதியில்லை என்பது குறித்து திட்டம் வகுத்து வருவதாகவும், ஓராண்டு காலத்திற்குள் இந்த திட்டம் முழுவதுமாக நடைமுறைபடுத்தபடும் எனவும் தெரிவித்தார்
இதையடுத்து, சென்னை முழுவதிலும் உள்ள நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து அப்புறப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் நடைபாதை வியாபாரிகளை கணக்கெடுத்தது தொடர்பாக கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 14 =