செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் அறையில் தீ

0

செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் அறையில் நேற்று காலை தீப்பற்றியது. இந்த தீ பெருமளவு பரவவில்லை. ஆசிரியர் அறையில் இருந்த சொகுசு இருக்கைகளில் தீப்பற்றிக் கொண்டதால் அங்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால் மாணவர்கள் பதற்றத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகினர். இதன் பிறகு அடுத்த சில நிமிடங்களில் தீயணைப்பு மீட்புப் படையினர் தளத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆசிரியர் அறையில் ஏற்பட்ட மின்சார கோளாறின் காரணமாகவே தீப்பற்றியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here