சூழ்ச்சியின் சூத்திரதாரி மகாதீர் அல்ல

0

நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் போராட்டம் தொடர்பாக துன் மகாதீர் ஏமாற்றம் அடைந்திருப்பதாக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார்.

பேரரசரைச் சந்தித்து விட்டு பிகேஆர் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் சதியில் தாம் சம்பந்தப்படவில்லை என்று மகாதீர் கூறியதாக அன்வார் குறிப்பிட்டார்.

“பிகேஆர் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் மகாதீரிடம் நான் ஒன்றை முறையிட்டேன். கூட்டாக அந்த துரோகத்தை கையாள்வோம் என்று அவரிடம் கூறினேன். ஆனால் மகாதீர் மாறுபட்ட சிந்தனையைக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அந்த விதத்தில் தாம் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது என்று மகாதீர் எண்ணுகிறார். சூழ்ச்சியில் அவரின் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் பிகேஆரில் உள்ளவர்களும் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்” என்று அன்வார் கூறினார்.

மகாதீரும் பேரரசரும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் போராட்டத்தைத் தீர்ப்பதற்கு ஏதுவாக எல்லாத் தரப்பினரும் அரசியலமைப்பு செயல்முறைகளை மதிக்க வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார். அதற்கு முன் ஸ்ரீ கெம்பாங்கானில் அவரின் இல்லத்தில் மகாதீரை அன்வார் சந்தித்தார். இச்சந்திப்பில் துணைப் பிரதமர் வான் அஸிஸாவும் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் அமானா தலைவர் முகமட் சாபுவும் உடனிருந்தனர்.நேற்று காலை 10.45 மணிக்கு அவர்கள் மகாதீரின் இல்லத்திற்குச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 2 =