‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை…. எப்போ ரிலீஸ் தெரியுமா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தை வருகிற 30ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூர்யா, சூரரைப்போற்று படம் விமானப் போக்குவரத்து சம்பந்தமான கதைக்களத்தை கொண்டது. மேலும் இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது என்பதால், அவர்களிடம் பல அனுமதிகளை பெற வேண்டி இருந்தது. இன்னும் சில என்.ஓ.சி. எனப்படும் தடையில்லா சான்றிதழ்களுக்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் படம் திட்டமிட்டபடி 30-ந் தேதி வெளியாகாது என கூறி இருந்தார்.
இந்நிலையில், அப்படத்திற்கு விமானப்படை தரப்பில் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்துவிட்டதாக 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார். புதிய ரிலீஸ் தேதி மற்றும் முக்கிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என அவர் கூறியுள்ளார். 

சூர்யா

இப்படத்தை தீபாவளி பண்டிகையன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் நயன் தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படமும் தீபாவளியன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 6 =