சூப்பரான சைடிஷ் வெண்டைக்காய் பிரை

தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் – 1/2 கிலோ
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1/4 டீஸ்பூன்
அரிசி மாவு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக நறுக்கி நடுவில் கீறி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலந்த மசாலாவை வெண்டைக்காயின் நடுவில் வைத்து அரை மனி நேரம் ஊற வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுக்கவும் சூப்பரான வெண்டைக்காய் பிரை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 9 =