சுஹாகாம் சபா தேர்தலைக் கண்காணிக்க தொடங்கியது!

நேற்று முதல் மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) சபா சட்டமன்றத் தேர்தலைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. சுஹாகாம், தொண்டூழியர்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட 30 பேர் குறிப்பிட்ட தொகுதிகளில் பிரசாரம் மற்றும் வாக்களிப்பைக் கண்காணிப்பர் என சுஹாகாம் அறிக்கை ஒன்றில் கூறியது.
மத்துங்கோங், பண்டாவ், கராம்புனாய், டாராவ், கெப்பாயான், மோயோக், மெம்பாகுட், கோலபெஞ்யூட், நாபாவான், சூக், கம் -கம், சுங்கை மணிலா, கெமாபோங், மெலாலாப், புஹாயா, சுலாபாயான், செனாலாங், குக்குசான், தஞ்சோங் பத்து, பந்தாய் டாலிட், சுலாமான், இனானாம், அப்பி அப்பி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு தேர்தல் குற்றங்கள் குறித்தும் வாக்காளர்கள் சுஹாகாமிடம் புகார் செய்யலாம் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
வாக்காளர்கள் 088-317405 அல்லது 019-3245650 என்ற எண்களில் சபா சுஹாகாம் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − two =