சுற்றுலா ஏஜென்ட் தாக்கல் செய்த வழக்கிற்கு அஸ்மின் பதில் மனு

0

தமது வெளிநாட்டுப் பயணச் செலவுகளைக் கோரி வழக்குத் தொடுத்த சுற்றுலா ஏஜெண்டின் மீது பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி பதில் வழக்கை சார்வு செய்திருக்கிறார்.
கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அந்த பதில் மனு டிசம்பர் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தாம் செலுத்த வேண்டிய 162,272 ரிங்கிட்டை செலுத்துவதாக அஸ்மின் குறிப்பிட்டிருந்தார்.
20 வயதுக்கும் குறைந்த தமது பிள்ளைகளின் பயணச் செலவுகளைத் தாம் செலுத்தவிருப்பதாகவும், 20 வயதுக்கும் மேலான பிள்ளைகளின் பயணச் செலவுகளை அவர்களே செலுத்துவார்கள் என அஸ்மின் தெரிவித்ததோடு, அமைச்சர் என்ற கணக்கில் காட்டப்பட்டுள்ள செலவுகளைத் தாம் செலுத்த இயலாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =