சுற்றுப்பயண வழிகாட்டிகளின் சுமைகளை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு இடையில் தங்களின் தொழில்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக உரிமம் பெற்ற சுற்றுப்பயண வழிகாட்டிகளின் சுமைகளை குறைக்கும் நடவடிக்கைகளை மலேசியா உற்பத்தித்திறன் கழகம் (எம்.பி.சி) இன்று மேற்கொண்டுள்ளது.
சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சகத்தின் கீழ் சுற்றுப்பயண வழிகாட்டிகளின் சுமைகளை குறைக்கும் வகையில் ஜனவரி 1, 2020 முதல் டிசம்பர் 31, 2021 வரை உரிமம் பெற்ற சுற்றுப்பயண வழிகாட்டிகளுக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
“மேலும், சுற்றுப்பயண வழிகாட்டிகளுக்கு தங்கள் உரிமங்களை புதுப்பிக்க இரண்டு அல்லது மூன்று ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு சுற்றுப்பயண வழிகாட்டிகள் தங்களின் செலவுகளைக் குறைத்துக் கொள்வதற்காக குறுகிய காலத்திற்கு அலுவலக இடத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று மலேசியா உற்பத்தித்திறன் கழகம் நேற்று ஓர் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
மலேசியா உற்பத்தித்திறன் கழகத்தின் இயக்குநர் ஜெனரல் டத்தோ அப்துல் லத்தீப் அபு செமான் கூறுகையில், இம்மாற்றங்கள் உரிமம் பெற்ற சுற்றுப்பயண வழிகாட்டிகளுக்கு கோவிட்-19 நெருக்கடியின் காலத்தில் தங்கள் வணிகத்தைத் தொடரத் தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என்று அரசாங்கம் நம்புகிறது என்றார்.
மலேசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள இயக்கத் தடைகள் மற்றும் பயணத் தடைகள் ஆகியவற்றால் ஏற்பட்ட பெரும் இழப்புகளின் காரணமாக அழுத்தங்களை எதிர்கொள்ளும் உரிமம் பெற்ற சுற்றுப்பயண வழிகாட்டிகளின் அழுத்தங்கள் தளர்த்தப்பட்டுள்ளன இந்நடவடிக்கைகள் கணிசமாகக் குறைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், மலேசியா உற்பத்தித்திறன் கழகம் சுற்றுப்பயண வழிகாட்டிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு உதவித் தொகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =