சுயலாபத்திற்காக மகளிர் அணியைப் பயன்படுத்திய முன்னாள் தலைவர்கள்

பிகேஆர் மகளிர் அணியை கடந்த காலத் தலைவர்கள் தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தி வந்ததாக கட்சியின் புதிய மகளிர் அணித் தலைவி புஸியா சாலே கூறினார்.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸுரைடா கமாருடின், ஹனிஸா தால்ஹா போன்ற தலைவர்கள் பதவிகளை அதிகாரத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாக அவர் சொன்னார்.
கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலியுடன் இணைந்து பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு இவர்கள் காரணமாக இருந்ததாக அவர் தெரிவித்தார். இவர்கள் மகளிர் மற்றும் குடும்பங்களின் நலன்களுக்காகப் போராடவில்லை என முன்னாள் துணையமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.
தமது தலைமையில் பிகேஆர் மகளிர் அணி சரியான இலக்கை நோக்கி இயங்குவதாக குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
ஸுரைடா கமாருடின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் பிகேஆர் மகளிர் அணித் தலைவியாக புஸியா சாலே நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 18 =