சுயநலத்திற்காக ஊழல்வாதிகளுடன் ஒத்துழைத்து வரும் பெர்சத்து தலைவர்கள்

தங்களின் சுயநலத்திற்காக பெர்சத்து கட்சியைச் சேர்ந்த சில தரப்பினர் ஊழல் வாதிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக பெர்சத்து அவைத் தலைவர் துன் முகாதீர் முகமது சாடினார்.
ஊழல்வாதிகளை எதிர்த்து போராட உறுதி கொண்ட இவர்கள், இப்போது தங்களின் கொள்கைகளை மாற்றிக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த பொதுத்தேர்தலில் வாக்குகளை பெறும் நோக்கத்திற்காக மட்டும் இவர்கள் அவ்வாறு செய்தார்களா? என முன்னாள் பிரதமருமான அவர் வினவினார். நடப்பு அரசாங்கத்தில் உள்ள சில ஊழல்மிக்க தலைவர்களுக்கு நாம் உதவினால், யாரும் இனி நம்மை நம்பப்போவதில்லை என துன் மகாதீர் தெரிவித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பித்தான் மக்கள் பக்காத்தானுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியதாக அவர் சுட்டிக் காட்டினார். பெர்சத்து தனது கொள்கையை மறந்து விட்டால், அந்த கட்சி சீரழிந்து விடும் என லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இந்த நிலையில் ஊழல்மிக்க தலைவர்களிடமிருந்து மலாய் சமூகத்தை நாம் எப்படி காப்பாற்ற முடியும் என அவர் வினவினார். பெர்சத்து கட்சி மகாதீர் மற்றும் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஆகியோருக்கிடையே இரு அணிகளாக இயங்கி வருகிறது.
கடந்த வாரம் மகாதீர் உட்பட பெர்சத்துவின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + nine =