சுத்திகரிப்புப் பணிக்காக பசார் போரோங் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மூடப்படும்

0

சுத்திகரிப்பு, கிருமிநாசினி தெளிக்கும் பணிகளுக்காக செலாயாங் பசார் போரோங் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மூடப்படும்.அதே வேளையில், கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இதர சந்தைகளும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்தப் பணிகளுக்காக மூடப்படும் என கோலாலம்பூர் டத்தோ பண்டார் நூர் ஹிஷாம் அமாட் டஹ்லான் கூறினார்.
இந்த சந்தைகளில் உள்ள அங்காடி வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் தங்களுடைய கடைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.அதே வேளையில், கிருமி நாசினி தெளிக்கும் பணியின் போது ஏற்படும் பாதிப்பு அல்லது இழப்புகளுக்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் பொறுப்பேற்காது என அவர் தெளிவுபடுத்தினார்.
கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க கோலாலம்பூர் மாநகர் மன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.பத்து, தித்தி வங்சா, சிகாம்புட், வங்சா மாஜு, செத்தியா வங்சா மற்றும் கெப்போங் தொகுதிகளில் உள்ள 16 சந்தைகளிலும் சுத்திகரிப்பு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 19 =