சுத்திகரிக்கப்பட்ட நீரை ஏன் சிங்கப்பூரிலிருந்து வாங்கவேண்டும்? மலேசியாவிலே அப்பணியினைச் செய்யலாமே!

0

மலேசியா சிங்கப்பூருக்கு குறைந்த விலையில் நீரை விற்று, சுத்திகரிக்கப்பட்ட நீரை ஏன் இன்னும் அதிக விலைகொடுத்து வாங்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் வினவப்பட்டது.

மூலநீரை வடிகட்டி சுத்திகரிக்கும் கட்டமைப்புப் பணிகளை ஏன் அரசாங்கம் இங்கு மேற்கொள்ளவில்லை என்றும் கேள்வி கேட்கப்பட்டது.

பாஸ் கட்சியைச் சார்ந்த பெண்டாங் எம்.பி. அவாங் ஹாஸிம் இக்கேள்வியை 2020 வரவு செலவு திட்ட விவாதத்தின் போது இடை மறித்து இவ்வினாவினை எழுப்பினார். அவ்விவாதத்தில் பங்கேற்று சிகாமட் எம்.பி. சந்தாரா குமார் பேசிக் கொண்டிருக்கும்போது இடைமறித்து இக்கேள்வியை தொடுத்தார் பாஸ் கட்சியைச் சார்ந்த எம்.பி.

ஜொகூரில் பயன்படுத்துவதற்காக மலேசியா சிங்கப்பூரிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.

ஏன் மலேசியா அச்சுத்திகரிப்பு பணியினை மேற்கொள்ளக்கூடாது. இதன் வழி பணம் வெளிநாட்டுக்கு செல்வதை நாம் தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

பாஸ்கட்சி எம்.பியின் கேள்விகள் அனைத்தும் நீர், நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சை குறிவைத்தே கேட்கப்பட்டது.
மற்றொரு முக்கியமான கேள்வி ஒன்றினையும் அவாங் எழுப்பினார். மலேசியா சிங்கப்பூருக்கு மூல நீரை விற்று சுத்திகரிக்கப்பட்ட நீரை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கான அவசியம் என்ன என்று அவர் வினவினார்.

எனவே நாங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சை கேட்டுக்கொள்வது இதுதான். ஜொகூர் மாநிலம் மற்றும் ஆயர் ஜொகூர் சிங்கப்பூரின் தேவைக்காக பயன் பாட்டுக்காக மட்டும் நீரை விற்றால் போதும். சிங்கப்பூரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை மலேசியா வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று எம்.பி. அவாங் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 8 =