சுட்டுக் கொல்ல போலீஸ் பணம் கொடுத்து அமர்த்தப்பட்டனரா?

0

அண்மையில் பத்து ஆராங்கில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போலீஸாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட மூவரில் ஒருவரான தவச்செல்வனின் தந்தை என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட கோவிந்தசாமி அண்மையில் வாட்ஸ்அப் காணொளி மூலமாகப் பேசி வெளியிட்ட தகவல் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தனது மகன் தவசெல்வனைக் கொலை செய்வதற்கு பணம் கொடுத்து அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவர் அக்காணொளியில் குற்றம் சாட்டியுள்ளார். அவரது குற்றச்சாட்டை அரச மலேசிய காவல் படைத் தலைவர் அப்துல் ஹாமிட் படோர் உடனடியாக, தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டு கடத்தப்படும் சம்பவங்களுக்கு எதிராக செயல்படும் ’கேஜ்ட் எனப்படும் ஓர் அமைப்பு கோரிக்கையை முன் வைத்துள்ளது. தவசீலனின் தந்தை கூறியுள்ளதாவது: என் பெயர் கோவிந்தசாமி. நான் ஜொகூரில் வசிக்கிறேன். அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என் மகன் தவசெல்வன், அவரின் நண்பர் மகேன், என் மருமகன் ஜனார்தனன் வியஜரத்னம் ஆகியோர் போலீஸாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட வேளையில், மகள் மோகாம்பாள் அங்கிருந்து தப்பித்து எங்கு சென்றுவிட்டார்? என்ன ஆகிவிட்டார்? உயிருடன் தான் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை.
எந்தக் காரணமும் இல்லாமல் உணவருந்தச் சென்ற அவர்களை செர்டாங்கிலிருந்து பிடித்து வேறொரு காரில் ஏற்றி அவர்களின் காரை ஓர் ஓரமாய் கிடத்திவிட்டு அங்கிருந்து பத்து ஆராங் வளைவு பாதையில் வேறொரு காரில் அவர்களை ஏற்றி, அடித்து, கொடுமைப்படுத்தி, சுட்டு கொலை செய்திருக்கிறார்கள்.
அது மட்டுமின்றி, அந்தச்
சூழலில் என் மகள் போலீஸாரி டமிருந்து தப்பி ஓடும்போது அவரின் காலில் சூடு பட்டு தப்பித்துள்ளார். இருந்தாலும் மறுநாள் மோப்ப நாயின் மூலமாக அவரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது.
என் மகன் மீது புகார்கள் இருந்தது உண்மை தான். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக 3 ஆண்டுகாலம் சிம்பாங் ரெங்கத்தில் அவர் தண்டனை அனுபவித்தார். கடந்த 24.11.2017 அன்று சிம்பாங் ரெங்கத்திலிருந்து வெளியாகி ஸ்ரீ ஆலாமில் அவருக்கு பிசிஓ கிடைக்கப்பெற்றது.
இந்த விவகாரத்தில் யாரெல்லாம் தீவிரமாக வேலை செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அதை நான் சொன்னால் என் உயிருக்கு ஆபத்து என்றும் நான் நன்கு அறிவேன். இருந்தாலும் சூழ்நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக போட்டுடைக்க நான் தயார்.
பிசிஓ முடிந்து என் மகன் தவசெல்வன் மிகவும் கஷ்டப் பட்டான். நான் தான் அவனுக்கு உதவிச் செய்து கார் கழுவும் கடையைத் துவக்கிக் கொடுத்தேன். அதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 600 முதல் 700 வெள்ளி வரை அவன் சம்பாதித்து வந்தான். அதில் லாபம் மட்டும் 400 வெள்ளி வரை கிடைக்கும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 17,000 வெள்ளி வரை அவன் சம்பாதித்து வந்தான். இந்த நிலையில் போலீஸார் சொல்வது போல அவன் கொள்ளையடிக்க வேண்டிய அவசியமில்லை. நானும் தாமான் பாயுவில் (பாக்கார் பத்து) கார் கழுவும் கடை வைத்து நடத்தி வருகிறேன்.


இப்படி சொந்தத் தொழில் செய்து சம்பாதித்து வந்த என் மகன் மீது 60 கொள்ளை குற்றச்சாட்டுகளை போலீஸார் பதிவு செய்தனர். அது மட்டுமல்லாமல் அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என் மகனிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் சொல்வதும் அப்பட்டமான பொய்.
உண்மையில் அவன் திருந்தி நல்ல வாழ்க்கை வாழ்ந்தான். சொல்லப் போனால் அவனின் கார் கழுவும் கடைக்கு அதிகமான போலீஸ்காரர்களே வந்து தங்களின்
கார்களைக் கழுவுவர். அப்படி யிருக்கும் பட்சத்தில் அப்போதே இவனை கைது செய்திருக்கலாமே?
சில காலத்திற்கு முன்னர் என் மகன் கீழே விழுந்து கை முறிவு ஏற்பட்டது. அப்போது கடையை அவனால் பார்த்து கொள்ள முடியாத நிலையில் என் மகள் பார்த்து கொண்டார்.
என் மகன் தவச்செல்வனால் எந்த வேலையும் சொந்தமாக செய்து கொள்ள முடியாத நிலையில் அவனை கோலாலம்பூரிலுள்ள என் மனைவி வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். அங்கு ஒன்றரை மாதம் இருந்தான். இந்த ஒன்றரை மாத காலகட்டத்திலா அவன் மீது 60 புகார்கள் கிடைத்துள்ளன? அப்படி இவ்வளவு குற்றங்கள் செய்யும் வரை காவல்துறை பார்த்துக் கொண்டு என்ன செய்தது?
இந்த நேரத்தில் சிவகுருவை பற்றி நான் கட்டாயம் சொல்லி ஆக வேண்டும். சிவகுரு பற்றி பேசும்போது என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது எனக்குத் தெரியும். ஏற்கெனவே 3 உயிரை பறிகொடுத்துவிட்டேன். இனி என்னைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என் குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை மற்றவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதால் தான் இதை நான் சொல்கிறேன்.
சிவகுரு என்பவர் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் மில்லியன் கணக்கில் பணத்தைத் திருடி கைது செய்யப்பட்டவர். ஆனால், அவரின் உறவினரான இன்ஸ்பெக்டர் ஒருவர் —- (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) அவருக்கு கிளந்தானில் பிசிஓ
வாங்கிக் கொடுத்தார் சில காலம் அங்கிருந்தவர், திடீரென்று கடத்தப்
பட்டார் என்ற கதை வெடித்தது.
உண்மையில் அவர் கடத்தப் படவில்லை. கடத்தப்படுவது போன்று நாடகமாடி சிவகுருவை அந்த இன்ஸ்பெக்டர் தாய் லாந்துக்கு அனுப்பி வைத்தார்.இந்தக் கடத்தலுக்கு துணையாக நின்றவரே இந்த வாக்குமூலத்தை
கொடுத்திருந்தார். அவர் இப்போது புக்கிட் அமானில் வேலை செய் கிறார். ஆனால், அவரின் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை.
பிசிஓ செல்வதற்கு முன்னதா கவே என் மகனுக்கு அந்தப் போலீஸ் காரர் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்தார்.
பத்துகேவ்ஸ் சுங்கை துவாவிற்கு அவரை கொண்டுச் சென்று செங்கல்லால் அடித்து தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொள்ளச் சொன்னார்கள்.
ஆனால், அந்த சமயத்தில் என் மருமகள் ஜஸ்மின் கோர் போலீஸில் கணவர் குறித்து புகார் செய்தது தொடர்பில் அங்கிருந்து அவரை அழைத்து வந்து சிம்பாங் ரெங்கத்திற்கு அனுப்பினர்.
சிவகுரு இப்போது உயிரோடு தான் இருக்கிறார். அவர் தான் காவல்துறையை ஏவி விட்டுள்ளார். அவர்களிடம் பணத்தைக் கொடுத்து என் கண்காணித்து நேரம் பார்த்து என் மகனை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
என் மகனுக்கு போய் என்ற புனைப்பெயரும் உண்டு. அவர் பிசிஓ முடித்து வெளியாகும்போது சம்பந்தப்பட்ட அந்தப் போலீஸ்காரர் என் மகனிடம் வந்து சிவகுருவின் ஆட்கள் உன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள், கொல்வ
தற்கு காத்துக் கொண்டிருக் கிறார்கள்.
முடிந்தவரை இங்கேயே இருந்து கொள். கோலாலம்பூருக்கு வராதே என்று கூறினார். அதற்கு என் மகன் சிவகுரு தான் காணாமல் போய்விட்டாரே இறந்துவிட்டாரே என்றதற்கு, அது
வெறும் நாடகம். அவரை நாங்கள் தான் தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தோம் என்று அந்தப் போலீஸ்
காரர் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.
இதே போன்று என் பிள்ளை களையும் இவர்கள் குறி வைத்து தாக்கி இருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? காவல் துறையிலே உள்ளவர்கள் தான் என்
குடும்பத்திற்கு இப்படியொரு அவலத்தை ஏற்படுத்தியிருக் கிறார்கள். ஒன்றும் தெரியாத என் அப்பாவி மருமகனை கொன்றதன் மூலமாக இவர்கள் இப்போது மாட்டிக் கொண்டார்கள். நிச்சயமாக இவ்விவகாரம் குறித்து இங்கிலாந்து தூதரகத்திற்கும் மலேசிய காவல்துறைக்கும் இவர்கள் கட்டாயம் பதில் கூற வேண்டும்.
இப்படி பொறுப்பானவர்களே திட்டமிட்டு நாடகத்தை தயார் செய்துவிட்டு இறந்தவர்கள் மேல் பழி போடுகிறார்கள். காரின் முன் பகுதியிலிருந்து அவர்களை சுட்டு இருக்கிறார் என்று போலீஸார் கூறுவது உண்மையென்றால் எப்படி சரியாக அந்தத் தோட்டா சூடு பட்டவர்களின் நெஞ்சில் பாய்ந்திருக்கும். ஆக, அனைத்துமே நாடகம் தான்.
’வேலியே பயிரை மேய்வது போல எங்களை பாதுகாக்க வேண்டி
யவர்களே எங்களுக்கு எமனாக இருக்கிறார்கள். நான் உண்மையை போட்டு உடைத்துள்ளேன். எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், நியாயம் நிலைக்க வேண்டும்.
ஒட்டுமொத்த தமிழர்களும் எங்களுக்கு ஒத்துழைத்து குரல் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். மருமகன் – மகனின் பிரேதத்தை பார்க்கையில், மருமகனில் தலையில்
காயம் ஏற்பட்டிருந்தது. உடலில் கீறல்கள் இருந்தன. முதுகு கன்னிப்
போய் இருந்தது. இதை பார்க்கையில் கண்டிப்பாக அவரை கொடூரமாகத் தாக்கியப் பின்னரே சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். என்ன கொடுமை இது?
இந்தக் காணொளியை பார்த்தவுடன் சிவகுரு கண்டிப்பாக என்னை கொல்வதற்கு ஆளை நியமிப்பார். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சிவகுருவும் அந்த இன்ஸ்பெக்டரும்தான் தான் காரணம்.
அவர்களுக்கு தைரியம் இருந்தால் ஆயுதம் இல்லாமல் என்னை நேருக்கு நேர் சந்திக்கட்டும். இவர்களின் சோற்றில் நாங்கள் யாரும் மண் போடவில்லை. எதற்காக எங்கள் உயிரை இவர்கள் குறி வைக்கிறார்கள்.
இதுவே ஒரு போலீஸ்காரர் குடும்பத்தில் இப்படி 3 உயிர்கள் ஒரே நேரத்தில் போயிருந்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பார்களா? இன்றே அதே வலி தான் எனக்கு. புரிந்து கொள்ளுங்கள் உதவி செய்யுங்கள். இது பற்றி ஊடகத்திடம் தெரிவிக்க நான் தயாராக இருக்கிறேன். தாராளமாக ஜொகூர்பாருவில் என்னை வந்து சந்திக்கலாம் என்று அவர் அந்த 14 நிமிடத்திற்கு காணொளியில் பேசியிருந்தார்.
போலீசாரின் மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த கலங்கத்தை போக்கி மக்களின் நல்லெண்ணத்தை மீட்டெடுக்க ஐஜிபி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேஜ்ட் கேட்டு கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 12 =