சுங்கை பட்டாணி தைப்பூச பாதுகாப்பிற்கு ‘கவான் கவான்’ பணிப்படைக் குழு

0

பல ஆண்டு காலமாக சுங்கை பட்டாணியில் நடைபெறும் தைப்பூச திருநாளுக்கு பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி வரும் கவான் கவான் பணிப் படை குழுவினர் இந்த ஆண்டும் கூடுதலான தொண்டூழியர்களை கொண்டு செயல்படப் போவதாக அதன் தலைவர் மாணிக்கம் தெரிவித்தார்.

அண்மையில் கெடா புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற உறுப்பினர் சண்முகத்தின் சிறப்பு அதிகாரி சோகி இவர்களின் பணிப் படைக் குழுவை அறிமுகப்படுத்தினார்.

கடந்த ஆண்டுகளைப் போல இவ்வாண்டும் தைப்பூசத் திருநாள் எவ்வித தங்கு தடையோ, அசம்பாவிதமோ இன்றி சிறப்பாக நடைபெற வேண்டும். கூடுமானவரை குற்றச் செயல்கள் நிகழாமல் பாதுகாக்கப்பட வேண்டும். பக்தர்கள் மனஉளைச்சலின்றி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தாங்கள் சிறப்பாக சேவை ஆற்றுவோம் என்று மாணிக்கம் உறுதி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − one =