சுங்கை சுமுன் மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் அவதி

0

மைல் சுங்கை சுமுனில் அமைந்துள்ள முகமது ஜம்ரா பொதுமண்டபத்தில் நடைபெறும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் உள்ளே செல்வதற்கான சிறப்பு வழியின்றியும், கழிப்பறையில் சிறப்பு வசதி ஏற்படுத்தாமலும் சுமார் 30 ஆண்டுகள் பிரச்சினையை அனுபவித்து வருகின்றனர் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சக்கரநாற்காலியை பயன்படுத்தும் பேறுகுறைந்தவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள படிகளை கடப்பதற்கு பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை மறுக்க இயலாது. இந்நிலையில் தன்னிச்சையாக மண்டபத்திற்குள் சக்கரநாற்காலியை செலுத்த முடியாததால், பொதுமக்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
அதனால், மாற்றுத் திறனாளிகள் படும் அவஸ்தையை முன்னிறுத்தி அவர்களை அந்த துன்பத்திலிருந்து மீட்பதற்கு நகராண்மைக் கழகமோ அல்லது பாகான் டத்தோ மாவட்ட அதிகாரி டத்தோ ஹனிப் இஸ்மாயிலோ தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களான வராலு தேவி, முருகன், ஏபி.முனியாண்டி, குணபதி, இராமராவ் ஆகியோர் தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − six =