சுங்கை சிப்புட் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கத் தயார்

இன்றைய சூழ்நிலையில் நாட்டின் சுகாதாரம் பெரிய கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில், அரசாங்கம் இயன்றளவில் உதவிகளை தினசரி வழங்கி ஆதரவு கரம் கொடுத்து வந்தாலும், படிப்பறிவு இல்லாத பாமர மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை என்ற குமுறல் எழுந்து வருவதாக சுங்கை சிப்புட் மனித நேய மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவி இந்திராணி தெரிவித்தார். அனைத்து நிலையிலும் இன்று ஆன்லைன் வழி அரசாங்கத்திடம் மக்கள் விண்ணப்பம் செய்தால் மட்டுமே அரசாங்க உதவிகள் கிடைக்கும் என்ற அறிவிப்பை செய்துள்ளதால்,70 விழுக்காடு பாதிப்புகள் நிலவி வருகிறது. ஆன்லைன் தெரிந்தவர்கள் சுயமாக கணினி வழி விண்ணப்பங்களை செய்து பலனை அனுபவிக் கிறார்கள்,கல்வி அறிவு இல்லாவர்களின் நிலை என்ன என்பதை யாருமே கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் இந்திராணி செல்வகுமார். இந்த தொகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு இன்னும் அரசாங்க உதவிகள் முழுமையாக சேரவில்லை என்பதை பகிரங்கமாக குறிப்பிட்டார் இந்திராணி. இங்கு வாழும் மக்களுக்கு என்ன உதவி தேவையோ அதை எங்களின் இயக்க உறுப்பினர்களிடம் தெரியப்படுத்துங் கள், அழைத்த குரலுக்கு களத்தில் இறங்குவோம், தொடர்பு கொள்ளுங்கள் 0165471208 திரு சிவா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 9 =