சுங்கை சிப்புட் கோப்பி மலையில் கட்டப்பட்ட நிலையில் ஆடவர் மீட்பு

இங்கு ஹிவூட் பகுதியில் அமைந்துள்ள கோப்பி மலை என்று அழைக்கப்படும் மலையில் 43 வயது ஆடவர் ஒருவர் போட்டக் கூச்சலால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அது குறித்து சுங்கை சிப்புட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர். தங்களுக்கு உதவியாக சுங்கை சிப்புட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் உதவியுடன் தேடிச் சென்றுள்ள னர். அந்த நிலையில், ஆடவர் ஒருவரை (வயது 43) மரத்தில் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த ஆடவரை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உதவியுடன் மீட்டு மலையிலிருந்து தரைக்கு கூட்டிவந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மாவட்டப் போலீசார் கூறுகையில், அந்த ஆடவர் தன்னைத்தானே ஒரு மரத்தில் சொந்தமாக கால்களைக் கயிற்றால் கட்டிக்கொண்டு தான், கூச்சலிட்டுள்ளார். ஆடவரின் உடலில் காயம் ஏதுமில்லை என்று தெரியவந்துள்ளது என்றும் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மாவட்டக் காவல் நிலைய அதிகாரி அந்த ஆடவரிடம் பல கோணங்களில் விசாரணை நடத்துவதாகக் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =