சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பினாங்கு பசுமை சங்கம் விருது

0

பினாங்கு அரசாங்கத்துடன் இணைந்த பினாங்கு பசுமை சங்கம் என்ற ஓர் அமைப்பு உள்ளது. அந்த அமைப்பு பினாங்கு மாநிலத்தில் வாழும் மக்களுக்கு அவர்கள் சூழலியல் சார்ந்து செய்யக்கூடிய செயல்பாடுகளுக்கு இரண்டு விருதுகளை வழங்கவுள்ளது.
ஒன்று முன்னோடியாக இருந்து செய்யக்கூடிய தனிமனிருக்கான விருது, இரண்டாவது விருது நீண்டகால பயனளிக்கக்கூடிய கூட்டுறவுக்கான விருது ஆகும். இந்த இரண்டு விருதுகளையும் பல காலமாக பினாங்கு ’கிரீன் கலர் என்று சொல்லக்கூடிய பசுமை சங்கம் செயல்பட்டு வழங்கி வருகின்றது.
இந்த விருது வழங்கும் நிகழ்வினை சில ஆண்டுகளாக கண்ணன் நாராயணன் தலைமை ஏற்று நடத்தி வருகின்றார். இந்த குழுவில் இயங்கும் போது பெரும்பாலும் சீனர்கள் தான் சூழலியல் சார்ந்த பல்வேறு வகையான செயல்பாடுகளை நடத்தி வருகின்றார்கள். அதற்கான விருதுகளையும் அவர்களே ஏற்றுக் கொள்கின்றார்கள்.
இந்தியர்களுக்கு இந்த விருது இதுவரை சென்றதில்லை. இது எனக்கு ஒரு பெரிய குறையாகவே இருக்கிறது என்று கண்ணன் நாராயணன் கூறினார். ஆனால், இந்த வருடம், பினாங்கு மாநிலத்தில் இருக்கக்கூடிய சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர், பள்ளியை ஒரு பசுமையாக மாற்றியிருப்பது பற்றி அறிந்து நாங்கள் அதைப் பற்றி பேசினோம்.
அவரும் இந்த விருதிற்காக தன்னை தயார் படுத்திக்கொண்ட நிலையில் முதல் முறையாக ஓர் இந்தியத் தமிழருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார். இந்நிகழ்வு இன்று 21ஆம் திகதி கேர்லா எனும் விருந்துபசாரத்தில் வழங்கப்படவுள்ளது.
இந்த விருதை பெறும் சங்க சின்னையா என்று சொல்லக்கூடிய அந்த தலைமையாசிரியர் மிகப் பொறுப்புடன் முப்பது வருடம் பல்வேறு பள்ளிகளில் வேலை பார்த்தாலும் சுற்றுச் சூழல் சம்பந்தமாக பல இயக்கங் களை முன்னெடுத்து அந்தப் பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர் களுக்கும் கொண்டு செல்வதில் மிக ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.
இப்போது தேர்வு பெற்றிருக்கும் இவர் அப்பள்ளியில் ஐக்கிய நாட்டு சபைகள் வழியாக செய்யக்கூடிய நீண்ட நாள் பயனளிக்கக்கூடிய சஸ்டைன்னபிள் டெவலப்மன்ட் (ளுரளவயயைேடெந னுநஎநடடியீஅநவே) என்று சொல்லக்கூடிய 17 இலக்குகளிலிருந்து பதினொரு இலக்குகளை அப்பள்ளி அடைந் திருக்கின்றது என்பது மிகச்சிறப்பான செய்தியாக அமை கின்றது. சங்க சின்னையாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண் டார் கண்ணன் நாராயணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + six =