சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளிக்கு 5 லட்சம் ரிங்கிட் உதவித் தொகை

பினாங்கு, சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியை மேம்படுத்தி மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, மத்திய அரசாங்கம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 200 ரிங்கிட் உதவித் தொகையை வழங்கிருக்கிறது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட கோரிக்கைக் குப் பின்னர், 2020-ஆம் ஆண்டின் அரசாங்க பள்ளிகளுக்கான உதவி தொகையின் மூலம் இந்நிதி கிடைக்க பெற்றதாக சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியின் வாரிய மேலாளர், க.நடராஜன் தெரிவித்தார்.
சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியில், தற்போது, 135 மாணவர்கள் பயின்று வருவதுடன், 14 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
எனவே, பள்ளியின் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அடுத்த ஆண்டு புதிய மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க முடியும் என்று க.நடராஜன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
‘’அனைத்து வகுப்புகளிலும் குளிரூட்டி வசதி பொருத்தப்பட்டு, சிறிய மண்டபம் கட்டிக் கொடுப்பதே எங்களின் அடுத்தகட்ட நடவடிக் கைகள். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டு, இவ்வளவு விரைவில் இந்த நிதி கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்று அவர் தெரிவித்தார்.
அதோடு, பள்ளி சீரமைப்பு பணிகள், வண்ணம் பூசுதல், மின்சார பணிகளை மேற்கொள்ளுதல், கூரை பழுது பார்த்தல் ஆகிய வேலைப்பாடுகளுக்கும் இந்நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் அப்பள்ளியில் மேற்கொள்ளப்படும் இந்த மறுசீரமைப்பு பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + nineteen =