சுங்கைவே இம்பியான் பைடுரி அடுக்குமாடியில் மக்கள் குடிநீரின்றி தவிப்பு

சுங்கைவே இம்பியான் பைடுரி 4 புளோக்குகளைச் சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் 4 ஆயிரம் பேர் குடிநீர் இன்றி நான்கு நாட்களாக பாதிப்படைந்தனர்.
இரு தினங்களுக்கு முன்பு மதியம் சபாஷ் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு நீர் குழாயை பூட்டி விட்டனர். திடீரென தண்ணீரை நிறுத்தம் செய்ய என்ன காரணம் என்பது தெரியவில்லை.
கைக்குழந்தைகள், முதியவர்கள், சிறுபிள்ளைகள் கொண்ட குடும்பங்கள் சமையல் செய்வதற்குக் கூட தற்போது தண்ணீர் இல்லை. நான்கு கட்டட அடுக்குமாடிகள் புளோக் ஏ.பி.சி.டி. குடியிருப்பாளர்கள் நிலையை ஏன் புரிந்து கொள்ளவில்லை.
எங்கள் நிலையை கண்டறிந்த நகராண்மைக்கழக உறுப்பினர் சுகுமாறன், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின்னுடன் இணைந்து உடனடியாக தண்ணீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தது பேருதவியாக அமைந்தது என குடியிருப்பாளர் ஜெயகோபி தெரிவித்தார்.
நேற்றிரவு அடுக்குமாடி புளோக்குகளைச் சேர்ந்த அனைவருக்கும் தண்ணீர் வண்டிகள் வரவழைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது இந்த நீர் விநியோக பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என ஜெயகோபி குடியிருப்பாளர்கள் சார்பில் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + seventeen =