சீரமைப்புப் பணிகளுக்காக பந்திங் பெரிய சந்தை விரைவில் மூடப்படும்

0

பந்திங் பெரிய சந்தையில் மேற்கொள்ளப்படவிருக்கும் சீரமைப்புப் பணிகளுக்காக அப்பகுதி விரைவில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நீண்ட காலமாக இச்சந்தையில் நிலவி வந்துள்ள கால்வாய்கள், கூரைகள், தூய்மைக்கேடு பிரச்சி னைகள் காரணமாக மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட விருப்பதால் பந்திங் பெரிய சந்தை மூடப்படும் என்ற அறிக்கைகள் அங்குள்ள வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.


அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் வியாபாரத்தை மேற்கொள்ளும்படி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
கோலலங்காட் மாநகர் மன்றத்
தின் இந்த நடவடிக்கையால் தங்களின் வியாபாரம் பாதிக்கப் படலாம் என தாம் கருதுவதாக, இங்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி வியாபாரம் செய்து வரும் மு.பெரியண்ணன் (வயது 82) தமிழ் மலரிடம் தெரிவித்தார். தற்காலிக கூடாரங்களில் வியாபாரம் செய்வது பாதுகாப்பில்லை என்றார் அவர்.
கடந்த 15 ஆண்டுகளாக, இங்கே ஆட்டிறைச்சி வியாபாரம் செய்துவரும் பன்னீர் செல்வம், இந்தச் சந்தைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் வியாபாரத்தை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது தனக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தலாம் என தெரிவித்தார். காரணம் குளிர்பதனப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாக்கப்படும் இறைச்சி, அங்கு மின்சார வசதி யில்லையெனில் கெட்டுப்போகும் என தாம் அஞ்சுவதாக அவர் கூறினார்.


இந்த பந்திங் பெரிய சந்தையில் வியாபாரம் செய்து வரும் பலரும் பல சிரமங்களை எதிர்நோக்கக்கூடும் என தெரிவித்தனர்.
ஆகவே கோலலங்காட் மாநகர் மன்றம் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here