சீப்போர்ட் தமிழ்ப்பள்ளியின் பாலர்பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே

பாலர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளதாகவே தெரிய வருகிறது.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சீப்போர்ட் தமிழ்ப் பள்ளியில் பாலர் பள்ளிக்கு நேற்று காலையில் ஒரு மாணவர் மட்டுமே வந்தார்.
கோவிட்-19 தாக்கத்தைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் உள்ள அரசாங்க, தனியார் பாலர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இருந்தாலும் எதிர்பார்த்த எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லை. நேற்று சீப்போர்ட் பாலர் பள்ளிக்கு வந்த ஒரே மாணவரை ஆசிரியர்கள் வரவேற்றதுடன் பெயர், கைபேசி எண்ணை பதிவு செய்து உடல் வெப்ப அளவையும் பரிசோதித்தனர். கிருமி நாசினி கொண்டு கைகளையும் சுத்தப்படுத்தினர்.
இந்த பாலர் பள்ளியில் 25 மாணவர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் பாலர் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல்நாள் 5 மாணவர்கள் வந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + fourteen =