சீன நாட்டவர்களுக்கு விசா நீட்டிப்பு இல்லை

மலேசியாவில் சுற்றுலாப் பயணிகளாக வந்திருக்கும் சீன நாட்டவர்களுக்கு விசா நீட்டிக்கப்படாது என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
புத்ரா ஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சின் பேரிடர் நிர்வாக மையத்தில் விளக்கம் பெற்ற பின்னர், அவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படாமல், இங்கேயே சிகிச்சை அளிக்கப்படும். மேலும், அவர்களின் விசா கட்டாயமாக நீட்டிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் 7 பேராக இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் சீனாவின் வுஹான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகும் என அவர் தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின் உத்தரவுக்கு இணங்க வெளிநாட்டினர் இங்கிருக்கும்போது, நோய்வாய்ப்பட்டிருந்தால், இங்கு சிகிச்சை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். இது எல்லாவித நோய்களுக்கும் பொருந்தும்,
சீன நாட்டவர்களுக்கான விசாவை நீட்டிக்கக் கூடாது என்ற அறைகூவல் விடுக்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், தற்போது சீனச் சுற்றுப் பயணிகள் மலேசியாவுக்கு வருவது வெகுவாகக் குறைந்திருப்பதால், அந்த விவகாரத்தை எழுப்புவது தேவையற்றது என குறிப்பிட்டார்.
மேலும், இங்கு அனைத்துலக மாநாடுகள் மற்றும் பெரிய அளவிலான பொதுக் கூட்டங்களை நடத்துவது சம்பந்தமாக உலக சுகாதார நிறுவனம் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதால், தற்போதைக்கு அதற்குத் தடையில்லை.
மேலும், அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவில் லட்சக் கணக்கில் பொதுமக்கள் கூடுவர். அது அணுக்கமாகக் கண்காணிக்கப்படும். அது சம்பந்தமாக உலக சுகாதார நிறுவனம் வெளியிடும் அறிவிப்புகளையும் விதிமுறைகளையும் அரசு பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் என வான் அஸிஸா குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =