சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்

இந்தியா உடன் மோதல் போக்கு, கொரோனா விவகாரம், சரியும் உள்நாட்டு பொருளாதாரம், உலக சுகாதார அமைப்பின் விசாரணை என்று சீனாவுக்கு பல தரப்பிலும் இருந்து நெருக்கடி அதிகரித்துள்ளது.
இதுமட்டுமின்றி, பூடான் உடனும் தங்களுக்கு எல்லை பிரச்சினை உள்ளதாக முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக சீனா தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பூடான் உடன் தங்களுக்கு நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை உள்ளதாகவும், இதில் மூன்றாவது நபரின் தலையீடு தேவையற்றது’’ என்றும் கூறப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கடும் சவால்களை சந்தித்து வருவதாக கருதப்படுகிறது. கொரோனா விவகாரத்தை எதிர்கொள்வதிலும், பொருளாதாரம் மற்றும் சர்வதேச உறவுகளை கையாள்வதில் அவரது முயற்சிகள் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றன.

கொரோனாவுக்கு பிறகும் பொருளாதாரம் வலுவாக உள்ளது என்பதை காட்டுவதற்காகவும், சர்வதேச அரங்கில் எழுந்துள்ள பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காகவுமே இந்தியா உடனான எல்லை விவகாரத்தை அவர் கையில் எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
ஆனாலும் ஜி ஜின்பிங்கின் நடவடிக்கைகள் அவருக்கு மேலும் நெருக்கடியையே ஏற்படுத்தியுள்ளதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே அவருக்கு சவால்கள் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here