சீனாவில் 5.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

சீன நாட்டில் வடமேற்கே அமைந்துள்ள குயிங்காய் மாகாணத்தில் டெலிங்கா நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இந்த நில நடுக்கம் ரிக்டரில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நில நடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.   கடந்த 12-ம் தேதியும் குயிங்காய் மாகாணத்தில் மென்யுவான் கவுன்டி பகுதியில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  ஒரே மாதத்தில் குயிங்காய் மாகாணத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =