சீனாவில் இஸ்லாமியர்கள் மீதான அடக்குமுறைகளை பேச பாகிஸ்தான் மறுப்பது ஏன்? அமெரிக்கா கேள்வி

0

நியூயார்க்:
காஷ்மீரில் இந்திய அரசு மனித உரிமை மீறல்களை அரங்கேற்றி வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறது. காஷ்மீர் மக்கள் அனைவரும் திறந்தவெளி சிறையில் ராணுவத்தின் கட்டுப்பட்டில் அடைத்துவைக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார்.

–– ADVERTISEMENT ––

இந்நிலையில், காஷ்மீரை மட்டும் பேசும் நீங்கள் சீனாவில் இஸ்லாமியர்கள் சந்தித்துவரும் அடக்குமுறைகளை பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்? என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. 
இதுகுறித்து, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாத நிகழ்சியில் பங்கேற்ற தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலாளர் அலிஸ் வெல்ஸ் கூறுகையில், 
‘பாகிஸ்தான் ஐ.நா. சபையில் காஷ்மீர் குறித்து விவாதிக்க அதிக ஆர்வம் காட்டுகிறது. ஆனால் சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்கள் அந்நாட்டின் அடக்குமுறைகளால் மிகவும் மோசமான மனித உரிமைகள் மீறலுக்கு உள்ளாகி வருகின்றனர். 

உய்குர் முஸ்லிம்கள்

இதுகுறித்து ஐ.நா. சபையில் விவாதிக்க பாகிஸ்தான் எந்த முக்கியத்துவமும் வழங்கவில்லை. ஏனென்றால், பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியில்  சீனா உதவி செய்கிறது. அவ்வாறு சீனாவிடம் இருந்து வரும் பணம் தடைப்படுவதை விரும்பாததால்தான் அந்நாட்டில் முஸ்லிம் மக்கள் அனுபவித்துவரும் அடக்குமுறைகள் குறித்து கேள்வி எழுப்ப பாகிஸ்தான் தயங்குகிறது’ என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 8 =