சீனாவில் இருந்து வரும் சுற்றுப்பயணிகள் விசாவை நீடியுங்கள்

0

‘கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸால் உள்நாட்டு சுற்றுலாத் துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கிறது. குறிப்பாக உள்நாட்டு தங்கு விடுதிகள் வாடிக்கையாளர்கள் இன்றி மோசமான நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கன்ட்ரி ஹைட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் லீ கிம் இயூ வலியுறுத்தினார்.

தற்சமயத்திற்கு இந்த கோவிட் 19 பாதிப்பால் சீனாவில் இருந்து மலேசியாவிற்கு வரும் சுற்றுப்பயணிகளுக்கான விசா 30 நாட்களாகக் குறைக்கப் பட்டுள்ளது. இந்த விசாவை ஒரு வருட விசாவாக நீடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இப்படி செய்வதன் வாயிலாக சீனாவில் இருக்கின்ற பணக்காரர்கள் மற்றும் சுகாதாரப் பாதிப்பை எதிர் நோக்காதவர்கள் மலேசியாவிற்கு வந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அது தற்போது நலிந்து கொண்டிருக்கும் தங்கு விடுதி வர்த்தகத் துறையை கைதூக்கி விடும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × one =