சீனாவில் ஆயிரக்கணக்கானவர் மலேசியா சுற்றுலாவை இரத்து செய்தனர்

0

புகை மூட்டத்தின் காரணமாக சீன நாட்டின் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களின் மலேசிய விடுமுறையை இரத்துச் செய்துவிட்டு மற்ற ஆசியான் நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

மலேசியா வரவிருந்த 100க்கு மேற்பட்ட சுற்றுலாக் குழுக்கள், ஒவ்வொரு குழுவிலும் 30 பயணிகள், தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொண்டு வியட்நாம், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகியவற்றுக்குச் சென்றதாக Malaysia Inbound Chinese Association (மைகா) த மலேசியன் இன்சைட் இணைய செய்தித்தளத்திடம் தெரிவித்தது.

பயணத்தை இரத்துச் செய்ய முடிந்தவர்கள் இரத்துச் செய்தனர். முடியாதவர்கள் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார்கள். “அவர்கள் நிறைய குறைப்பட்டுக் கொண்டார்கள்”, என மைகா தலைவர் எஞ்சி இங் கூறினார்.

பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதால் சுமார் 80 பயண நிறுவனங்கள் 20 விழுக்காடுவரை வர்த்தக இழப்பை எதிர்நோக்கியதாகவும் இங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − six =