சீனாவிலிருந்து வருவோர் அனைவரையும் தடுத்து வைக்க இயலாது

0

கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ள சீனா மற்றும் மற்ற நாடுகளில் இருந்து வருவோர் அனைவரையும் தடுத்து வைக்க இயலாது என பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார். சில சமயங்களில் சீனாவில் இருந்து இரண்டு மில்லியன் சுற்றுப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் அனைவரையும் தடுத்து வைக்கப் போதுமான இடம் இல்லை.

வரும் சுற்றுப் பயணிகளிடம் நோய்க்கான அறிகுறி இருந்தால், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.    அந்த நோயைத் தடுக்க அதுவே  சிறந்த  முறை என அவர் குறிப்பிட்டார்.
வுஹானில் இருந்து  வருவோரைத் தடுத்து,  திருப்பி அனுப்பும் நடைமுறை அமல் படுத்தப்படாது. திருப்பி அனுப்பும்போது, அவர்களை அணுகவும் தொடவும் வேண்டும். அது கூட நோய் தொற்றக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் .
தற்போதைக்கு சிகிச்சை அளிப்பதை விட நோயைத் தடுப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கிள்ளான் ஹொக்கியான் மண்டபத்தில் நிதியமைச்சர் லிம் குவான் எங்கும் கிள்ளான் சீன வர்த்தக சங்கமும் இணைந்து நடத்திய சீனப் புத்தாண்டு விருந்துபசரிப்பில் கலந்து கொண்டபோது மகாதீர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here