சீனப் புத்தாண்டு காலத்தில் 12,948 சாலை விபத்துகள்

0

சீனப் புத்தாண்டு காலத்தில் 19,409 வாகனங்கள் சம்பந்தப்பட்ட 12,948 சாலை விபத்துகள் நேர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓப்ஸ் செலாமாட் எனும் சோதனை நடவடிக்கை இவ்வாண்டு ஜனவரி 18ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து சிலாங்கூரில் 3,870 விபத்துகளும் ஜொகூரில் 2,005ம், கோலாலம்பூரில் 1,540ம் நேர்ந்ததாக புக்கிட் அமான் போக்குவரத்துப் புலனாய்வு இயக்குநர் டத்தோ அஸிஸ்மான் அலியாஸ் தெரிவித்தார்.
மேலும், விபத்துகளினால் ஏற்பட்ட மரண எண்ணிக்கையைக் குறிப்பிட்ட அவர், சிலாங்கூரில் 23 இறப்புகளும் ஜொகூரில் 15ம், சரவாக்கில் 14ம், கெடாவிலும் கிளந்தானிலும் தலா 11 இறப்புகளும் நேர்ந்ததாகத் தெரிவித்தார்.
ஓப்ஸ் செலாமாட் சோதனை நடவடிக்கையின்போது வாகனத்தை ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியது, சமிக்ஞை விளக்கை அனுசரிக்காமல் போனது, வேகக் கட்டுப்பாட்டை மீறியது, ஆபத்து அவசர தடத்தில் வாகனத்தைச் செலுத்தியது, வாகன வரிசையை மீறிச் சென்றது, இரட்டைக் கோட்டில் வாகனத்தை முந்திச் சென்றது போன்ற காரணங்களுக்காக 128,539 சம்மன்கள் வழங்கப்பட்டன.
ஜனவரி 18ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த 16/2020 எனும் சோதனை நடவடிக்கை பிப்ரவரி 1 வரை தொடரும் என அஸிஸ்மான் அலியாஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here