சிவன் அவதரித்த நாளே சிவராத்திரி

0

பொதுவாக அனைவரின் பிறந்த நாட்களை பிறந்த நாளாகத்தான் கொண்டாடுகின் றோம். ஆனால் சிவன் அவதரித்த நாளை மட்டும் ஏன் சிவராத்திரி என்று கொண்டாடு கின்றோம்.
சிவன் என்பது மூலப்பொரு ளான பரமாத்மா இறைவனை குறிக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்துள்ளோம். ராத்திரி என்பது நாம் ஒவ்வொரு வரும் நாளும் சந்திக்கக்கூடிய பௌதீக ராத்திரி அல்ல. இது அறியாமை என்று ராத்திரியை குறிக்கின்றது. அதாவது நாம் அஞ்ஞான உறக்கத்திலிருந்து விழிப்படைந்து மெய்ஞான விழிப்புணர்வுக்கு வரவேண்டும் என்பதே அதன் கருப்பொரு ளாகும்.
அறியாமை என்பது அஞ்ஞானமெனும் காரிருள். மனிதர்களாகிய நாம் இப்போது கலியுகத்தில் வாழ்ந்து வருகின் றோம். எங்கும் அதர்மம் தலை விரித்து ஆடும். வேளையில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே சிவன் அவதரிக் கின்றார். இன்று நம்மிடையே குடும்பத்திலும் சரி, வேலை செய்யும் இடங்களிலும் சரி, அல்ல உறவுமுறைகளிலும் சரி எங்குப் பார்த்தாலும் தீய குணங்கள் அடிப்படையில் வன்முறைகள் புற்று நோயைப்போன்று மனித நேயத்தையே அழித்துக்கொண்டி ருக்கின்றது. இதிலிருந்து விடுபடுவதற்கு முதலில் நம்மைப் பற்றி அறிவது அவசியம். தன்னை அறிந்தவனே இறைவனை அறிகின்றான்.
இறைவனை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனா வான். நாம் அனைவரும் அழியாத அழிக்க முடியாத நிலை யான ஆத்மா. நம்முடைய இயற்கையான குணம் அமைதி நமக்குள் உயிரோட்டம் பெறும் போது நமது தெய்வீக குணங் களான அன்பு, இனிமை, பொறுமை, பணிவு, கருணை போன்று நற்குணங்கள் நம்மை நடமாடும் தெய்வங்களாக உருமாற்றும். அதேவேளை நமக்குள் அமிழ்ந்து கிடக்கும் அசுரகுணங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பணியைப் போல் விலகி விடும. காரணம் ஆத்மாவானம் ஒரு புள்ளி வடிவமான ஜோதி. இந்த ஆத்மீக ஜோதி நமக்குள்ளிருக்கும் உடல் உணர்வை அகற்றிவிடும். ஒன்றே ஆத்மீக ஜோதி நமக்குள்ளிருக் கும் உடல் உணர்வை அகற்றி விடும். ஒன்றே குலம், ஒருவனே தேவன். அதாவது நாம் அனைவரும் ஆத்ம குலத்தைச் சேர்ந்தவர்கள் நம்முடைய தந்தை பரமாத்மா சிவம். நாம் அனை வரும் அவரது குழந்தைகள் இறைவனே நமது உண்மையான தாயும் தந்தையும் ஆவார். நாம் பல பிறவிகள் எடுத்த பல தாய் தந்தையர்களை சந்தித்துள் ளோம். இவற்றில் யார் நமது உண்மையான தாய் தந்தை யர்கள் என்று நம்மால் சொல்ல முடியாது. இறைவன் ஒருவரே அந்த இடத்தை பூர்த்தி செய்பவர். அவரை அறியாத காரணத் தாலே நாம் அனாதைகளாக மாயை வலைக்குள் விழுந்து தீய குணங்களுக்கு அடிமைகளாகி இந்த உலகத்தையே மாசுபடுத்தி விட்டோம். இறைவன் சூரிய னுக்கு ஒப்பானவர். ஆகவே ஞான சூரியனான சிவபெரு மானை நமது இதயம் என்ற கோவிலில் குடிவைத்து சதா அவரது அன்பில் மூழ்கித் திளைப்போம்.
அதே வேளையில் வாழ்க்கை யில் நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளும் கஷ்டங்களும் நிரந்தரமானதல்ல. அவையாவும் நமது கர்ம வினைகள். இவற்றி லிருந்து நாம் விடுபட சதா இறை வனின் நினைவில் நிலைத் திருக்க வேண்டும். இதைத்தான் தியானம் என்று சொல்வதுண்டு. தியானத்தை நெருப்பு, அக்கினி என்றும் சொல் வார்கள். எப்படி நெருப்பில் போடப்படும் பொருட் கள் எரிந்து அழிந்து போகின் றதோ அதுபோல் இறைவனின் நினைவு என்ற நெருப்பில் நமக்குள்ளிருக்கும் தீய படிக்க வடிக்கங்கள் எரிவதோ நமது பாவ வினைகளும் அதில் எரிந்து போய்விடும். இப்படிப்பட்ட உண்மைகளை கருத்தில் கொண்டு நாம் சிவராத்திரியை அனுசரித்தோமானால் நமக்கும் பிறருக்கும் ஏன் இந்த உலகத் திற்கும் பலவழிகளில் நன்மை களை கொண்டு வரமுடியும். இக்கருப்பொருளை நமது மனதில் நிலைநிறுத்தி மகா சிவராத்திரியை கொண்டாடி மகிழ்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =