சில விநாடிகளில் தொற்றும் டெல்டா வைரஸ்

    உருமாற்றம் கண்டுள்ள கோவிட்-19 டெல்டா வைரஸ் ஒரு சில விநாடிகளுக்குள் ஒருவரைத் தொற்றிக் கொள்ளும் ஆபத்தைக் கொண்டது என்று சுகாதாரத்துறையின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்துள்ளார். கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலின் ஆரம்பக் காலத்தில் காணப்பட்ட உருமாற்றம் அடைந்த வைரஸ்களைவிட இப்புதிய வைரஸ் மிக வேகமாகப் பரவக்கூடியது என்று அவர் தெரிவித்தார். கடந்த காலத்தில், கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து ஒரு மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் இருக்கும் ஒருவருக்கு பதினைந்து விநாடிகளில் அந்த வைரஸ் தொற்றும் ஆபத்து இருந்தது. ஆனால், உருமாற்றம் கண்டுள்ள டெல்டா வைரஸ் ஒரு சில விநாடிகளுக்குள் ஒருவருக்குத் தொற்றக்கூடியது என்றும் அது காற்றில் பரவக்கூடியது என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் நூர் ஹிஷாம் குறிப்பிட்டார். அதன் தொற்றுப் பரவல் மிகத் துரிதமானது என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். வழக்கமான வைரஸின் தொற்றுப் பரவல் அளவு ஆர்.டி. 2.5க்கும் 3க்கும் இடைப்பட்டதாகும். ஆனால், டெல்டா வைரஸின் வேகம் ஆர்.டி. 5க்கும் 8க்கும் இடைப்பட்ட அதிக வீரியம் கொண்டுள்ளதாக உள்ளது என்றார் அவர். டெல்டா வைரஸ் 100 பேருக்குத் தொற்றினால் அந்நோய் 500 முதல் 800 பேருக்கு பரவும் என்றும் அவர் சொன்னார். டெல்டா வைரஸ் பரவத் தொடங்கிய பின்னர், மலேசியாவில் மட்டுமல்லாது பிரிட்டன் போன்ற இதர நாடுகளிலும் தொற்றுகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    twenty − one =