சிலாங்கூர் பக்காத்தான் அரசாங்கம் வலிமையுடன் உள்ளது

0

‘அரசியல் இடைஞ்சல்கள்’ இருந்தபோதிலும் சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் வலிமையுடன் இருப்பதாக மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
ஆனால் இந்த ‘அரசியல் இடைஞ்சல்’ கோவிட்-19 வைரஸ் தாக்கத்தால் மாநில பொருளாதார மீட்சிக்கு ஒரு கீழறுப்புச் செயல் என அவர் சொன்னார்.
சிலாங்கூர் அரசியல் நிலைத்தன்மையை கீழறுப்புச் செய்ய முயற்சிக்கும் தரப்பினர், சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் உத்தரவிற்கு எதிர்ப்பாகச் செயல்படக்கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
சிலாங்கூரில் இது போன்ற கீழறுப்புச் சக்திகள் இருப்பதைத் தாம் விரும்பவில்லை என மார்ச் மாதம் சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தபோது சுல்தான் இட்ரிஸ் ஷா கூறியதை அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 20 விழுக்காடு சிலாங்கூரில் இருந்துதான் வருகிறது என்பதால், நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகையால் சிலாங்கூரின் அரசியல் நிலைத்தன்மைக்கு அனைவரும் முக்கிய பங்காற்ற வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சி தாவியதால், கெடாவில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்தது தொடர்பில் அவர் கருத்துரைத்தார்.
சிலாங்கூர் சட்டமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பான் 48 இடங்களைக் கொண்டுள்ளது. தேசிய முன்னணி 5 இடங்களையும் பாஸ் 1 இடத்தையும் சுயேச்சை 2 இடங்களையும் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − twelve =