சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இரண்டு புது முகங்கள்

நேற்று முன்தினம் (17.9.2020) இங்கு, நடந்த மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இரண்டு புதியவர்கள் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் துவான் ஹாஜி பொர்ஹான் அமான் ஷா மற்றும் உஸ்தாஷ் ஷவாவி முஸ்னி ஆகிய இருவரும் ஆட்சிக் குழு உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றதற்கு, மாநில துணை சபா நாயகரும், மோரிப் சட்டமன்ற உறுப்பினருமான துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இம்மாநிலத்தின் மேம்பாட்டுக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் இருவரும் சிறப்பாக தங்களின் சேவையை தொடர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + fifteen =