சிலாங்கூரில் 23 பேருக்கு இன்ஃபுளூவென்ஸா!

சிலாங்கூர் மாநிலத்தில் இன்ஃபுளூவென்ஸா சளிக் காய்ச்சல் நோய்த் தாக்கம் நேற்று புதிதாக இருவருக்கு கண்டிருந்தது. அதில் ஒருவர் சைபர் ஜெயாவையும் மற்றொருவர் கிள்ளானையும் சேர்ந்தவர் ஆவர்.
முதல் கட்ட சோதனையில் சைபர் ஜெயாவில் உள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் 20 மாணவர்களுக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் தொடர்ந்து காய்ச்சலும் சளியும் இடையறாத இருமலும் கண்டிருந்ததாக சிலாங்கூர் மாநில சுகாதாரப் பிரிவுத் தலைவர் டாக்டர் ஷாரி ஙாடிமான் தெரிவித்தார். அதேபோல் கிள்ளானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு அந்நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளதால், அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நோய்த்தாக்கத்திற்கு ஆளான அனைவரும் இந்த சுற்றுவட்டாரங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் வெளி நோயாளியாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கிள்ளானில் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ள வேளையில், அதில் ஒருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார் என்றும் அவர் தகவல் கூறினார்.
முதல் கட்ட விசாரணையில் இவ்விரண்டு இடங்களிலும் வேறு யாருக்கும் இந்நோய்த் தாக்கம் ஏற்படவில்லை.
அதே வேளையில், இந்நோய் குறித்து இதுவரை சிலாங்கூர் மாநிலத்தில் எந்தப் பள்ளியும் மூடவில்லை என்றும் அவர் கூறினார். அதே வேளையில், பள்ளிகளில் மாணவர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ இந்நோய் குறித்த அறிகுறிகள் தொடர்ந்து தென்பட்டு வந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ளவேண்டும் என்றும் ஷாரி ஙாடிமான் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − thirteen =