சிறு வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்படும்

மீட்பு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை அமல்படுத்தும்போது சிறு வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, மீட்பு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தில் வணிகத்தை நடத்துவதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கருத்துகளைப் பெறுவதற்காக வணிக இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிடுவதாக கூறினார்.
“அவர்கள் என்ன சவால்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்கும் வகையில் அவர்கள் கையாளும் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும்.
“வணிகர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்வது மட்டுமின்றி அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த வகையான உரையாடல் எங்களுக்கு முக்கியமானது என்று நான் நம்புகிறேன்“ என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“அடுத்த வாரம் கோலாலம்பூரிலுள்ள வணிக இடங்களுக்கு நேரடியாக செல்ல விருக்கின்றோம்.
பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் அரசாங்கம் இந்த முயற்சியின் மீது அக்கறை கொண்டுள்ளது என்று நான் நம்புகிறேன்“ என்று அவர் கூறினார்.
மீட்பு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் போது நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் பணப்புழக்க பிரச்சினையும் அடங்கும் என்று முகமட் அஸ்மின் கூறினார். இந்த பணப்புழக்க பிரச்சினை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பணி நெறிமுறையால் ஏற்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.
“முதலாளிகள் அல்லது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை.
அதனால்தான் நாங்கள் அவர்களின் சுமையை குறைக்க ஊதிய மானியங்களை வழங்கியுள்ளோம்” என்றார் அவர்.
இந்த திட்டங்கள் சிறு வணிகர்களின் சுமையைக் குறைப்பது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + nineteen =