சிறு வணிகங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய சிலாங்கூர் அரசு ஊக்குவிக்கிறது

சிலாங்கூர் மாநில அரசு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (எஸ்.எம்.இ), ஆன்லைனில் விற்பனை செய்ய ஊக்குவிக்கின்றது.
சிலாங்கூர் மூத்த நிர்வாக அதிகாரியும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான நிலைக்குழுக்களின் தலைவருமான டத்தோ டெங் சாங் கிம் கூறுகையில், ஆன்லைனில் விற்பனை செல்வதன் மூலம், சிறு, நடுத்தர நிறுவனங்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது தங்கள் விற்பனையையும் வருமானத்தையும் ஈட்ட முடியும் என்று கூறினார்.
“எடுத்துக்காட்டாக, இ-காமர்ஸ் தளமான ஷோப்பியில் பதிவுசெய்து ஆன்லைனில் செல்ல விரும்பும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்காக மாநில அரசு ரிம1 மில்லியன் தள்ளுபடி வவுச்சர்களை வழங்கியது.
“இந்த திட்டத்திற்கு முன்பு, எங்களிடம் 2,000 சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஷோப்பியில் பதிவு செய்யப்பட்டன.
“ஆனால் இந்த திட்டத்தின் போது இந்த எண்ணிக்கை 6,400 சிறு, நடுத்தர நிறுவனங்களாக உயர்ந்துள்ளன.
“இந்த திட்டத்திலிருந்து ரிம11.7 மில்லியன் வருவாயை பதிவு செய்ய முடிந்தது” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், விரைவில் ஷோப்பி மற்றும் லாசாடா ஆகிய இரண்டு இ-காமர்ஸ் தளங்களின் ஒத்துழைப்புடன் மாநில அரசு ஆன்லைன் ஷாப்பிங் விற்பனையை ஏற்பாடு செய்யும் என்றார்.
“சபா, சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய இடங்களில் சி.எம்.சி.அமலில் உள்ளதால், அவ்விடத்தில் உள்ள வணிகர்கள் டிஜிட்டல் தளத்தில் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ள வேண்டும். வணிகங்களின் டிஜிட்டல்மயமாக்கல் என்பது ஒரு சிறிய திட்டம் அல்ல, அது ஒரு விரிவான பயணம்” என்று அவர் கூறினார்.
“இதனால் வணிக உரிமையாளர் புதிய இயல்பில் போட்டியிடுவதற்கு சிறந்த நடைமுறையைப் பின்பற்றுவதற்கான சரியான மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.
“டிஜிட்டல் உருமாற்றம் வணிகர்களின் செலவுக் குறைப்பு, அதிக உற்பத்தித்திறன், வாடிக்கையாளர் தக்கவைப்பு மற்றும் வருவாய் அதிகரிப்பு போன்ற பல நன்மைகளைத் தருகிறது” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 5 =