சிறு தொழில் செய்வோர் முறையான வியாபாரச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

அங்காடிக் கடைகள் முதல் குளிர் பானங்கள் தயாரித்து விற்போர் உட்பட உணவகங்கள் நடத்துவோரும் அதற்கான அடிப்படை பயிற்சி களைப் பெற்றிருப்பதுடன் முறையான அனுமதி பெற்ற வியாபார ச் சான்றிதழ் களை உடன் வைத்திருக்க வேண்டும். அதே வேளையில் பொது மக்களுக்கு இந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்வோர் அதன் தூய்மை ஆரோக்கியம் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இவற்றை முழுமையாக அறிந்தவர்கள் அவர்கள் மேற்கொள்ள விருக்கும் இந்தச் சிறு தொழில் வியாபாரத்தில் நன்கு தடம் பதிக்க முடியும் என்று மலேசிய இந்திய ர் சமூக நல மறுமலர்ச்சி இயக்கத்தின் (அரிமா) கோலலங்காட் மாவட்ட தலைவர் ஹரிதாஸ் ராமசாமி தமது வேண்டுகோளை முன்னெடுத்தார்.
ஞாயிற்றுக்கிழமை இங்கு கோலலங்காட் இந்தியர் குடியிருப்பாளர்கள் சங்கத்தின் அலுவலக மண்டபத்தில் அதன் தலைவர் வாசு முனியாண்டி ஏற்பாடு செய்து வழி நடத்திய இந்த நிகழ்ச்சி யைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அடிப்படை பயிற்சியின்றி மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் பயனற்றுப் போகும். இதை அறிந்த காரணத்தால்தான் இங்கு 30 பேருக்கு முறையான சிறு தொழில் அடிப்படை யுக்திகளைக் கற்றுத் தெளிவு பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வாசு இந்தப் பயிற்சிப் பட்டறையை நேர்த்தியாக ஏற்பாடு செய்து ள்ளார் என்று நகராண்மைக் கழக உறுப்பினருமான ஹரிதாஸ் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோலலங்காட் மாவட்ட சுகாதார இலாகா முன்னாள் அதிகாரி துவான் ஹாஜி லத்திப் தொழிலதிபர் கான் லங்காட் ஜெயா குடியிருப்பாளர்கள் சங்கத்தின் தலைவி ஆனந்தி ஆகியோர் பயிற்சியில் பங்கு பெற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
முன்னதாக அவர்கள் மேடையில் மாலை பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். இந்த பயிற்சியின் இறுதியில் பயிற்சி யாளர்களுக்கு வியாபாரச் சான்றிதழ்கள் வழங்கப் பட்டு பாராட்டப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =