
திரெங்கானுவில் ஏழு வயது சிறுவன் ஒருவனை ™குரங்கொன்று தாக்கியதில் அவனுடைய கையிலும் காலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. டுங்குன் அருகே கம்போங் பாரு கோலா அபாங் எனும் இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அச்சம்பவம் நடைபெற்றது.
அச்சிறுவன் தனது தாயார் சுசிலாவதி இஸ்மாயில் (வயது 39) என்பவருடன் அருகில் உள்ள உறவினரின் வீட்டுக்குச் சென்றுள்ளளான்.
மாலை ஏழு மணியளவில் அச்சிறுவன் தனியாக தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளை யில், அவன் மீது திடீரென்று குரங்கொன்று பாய்ந்து கடித்துக் குதறத் தொடங்கியது. சிறுவனின் அலறலைக் கேட்டு தாயார் சுசிலாவதி வெளியே வந்து பார்த்தபோது தனது மகனை குரங்கு கடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக ஓடிச் சென்று அந்த காட்டுக் குரங்கிடமிருந்தது அவனை மீட்டுக் கொண்டு வந்தார். வலது கையிலும் இடது காலி லும் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருந்த அவன், கெமமான் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.