சிறுமிகளின் ஒப்பனை அலங்காரப் போட்டி

0

சிறுமிகள் தங்களுடைய தாய்மாருக்கு ஒப்பனை அலங்காரம் செய்யும் போட்டி அண்மையில் இங்கு நடந்த அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் போட்டியை இங்குள்ள ’சுவாதி ஒப்பனை கலைப் பள்ளி ஏற்பாடு செய்திருந்தது.
இந்த போட்டியில் 11 சிறுமிகள் கலந்து கொண்டு தங்களுடைய தாய்மாருக்கு ஒப்பனை செய்த காட்சி அனைவரையும் கவர்ந்ததாக சுவாதி ஒப்பனை கலை பள்ளியின் நிறுவனர் ஆதிலெட்சுமி கூறினார்.
இந்தச் சிறுமிகள் மிகவும் துணிச்சலுடனும் ஆர்வத்துடனும் இப்போட்டியில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற சிறுமிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − eight =