சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் முறையற்றது

0

அடுத்த பிரதமரைத் தேர்வு செய்ய மார்ச் 2ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருக்கும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் முறையற்றது என பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் ராய்ஸ் யாத்திம் கூறினார்.

மார்ச் 2ஆம் தேதி அடுத்த பிரதமர் யார் என்பதை நாடாளு மன்றம் எப்படி முடிவு செய்ய முடியும் என அவர் வினவினார். காரணம் பிரதமரை நியமனம் செய்யும் அதிகாரம் பேரரசருக்கு மட்டுமே உண்டு என ஒரு சட்ட வல் லுனருமான அவர் தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினர் களுடன் நடத்தப்பட்ட சந்திப்பிற்குப் பின்னர் பேரரசர் ஒரு முடிவு செய்திருப்பார் என முன்னாள் அமைச்சருமான அவர் சொன்னார். ஆகையால் இந்த விவகாரத் தில் பேரரசருக்கு சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் சரியான ஆலோசனையை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத் தினார்.

எம்பிக்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் எந்தவொரு தரப்பிற்கும் பெரும்பான்மை கிடைக்காததால், இந்த விவகாரத்தை நாடாளு மன்றத்திடம் விட்டு விடுகிறேன் என்று பேரரசர் கூறியதாக நேற்று முன்தினம் மகாதீர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 11 =