சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக அன்வார்?

0

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக பிரதமர் துன் மகாதீர் நியமனம் செய்யலாம் என பிரதமரின் ஊடக ஆலோசகர் ஏ.காடிர் ஜாசின் கூறினார்.அண்மையில் நடந்து முடிந்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் படுதோல்வியைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமரின் முடிவைப் பற்றி பகிர்ந்த அவர், அன்வாரின் பங்கைக் கண்காணிக்க இது பொருத்தமான தருணம் என குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹராப்பானின் செல்வாக்கு சரிந்துள்ளதற்கு மட்டுமில்லாமல், பல அமைச்சர்கள் சிறப்பாகச் சேவையாற்றவில்லை என்பதால் அமைச்சரவையில் அவசியம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
இத்தருணத்தில் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக அன்வாரை பிரதமர் கொண்டு வரலாம் என சமூக வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அரசியல் பேசுவதைக் குறைக்கவும் நாட்டை வழிநடத்தவும் இது அவசியம் என தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார்.இதனிடையே மகாதீர் – அன்வாருக்கிடையிலான அதிகார மாற்றத்தை அவர்களிடமே விட்டுவிட வேண்டும் என காடிர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =