சிம்பாங் அம்பாட்டில் துப்புரவுப் பணி சுணக்கம்

0
Jpeg

சிம்பாங் அம்பாட், சபாக் பெர்ணத்திற்கு செல்லும் கம்போங் சுங்கை தீமா அருகில் பிரதான சாலையோரத்தில், அந்த சுற்றுவட்டார குடியிருப்பாளர்கள், கழிவுப் பொருட்களை மூட்டை மூட்டையாக கொட்டுவதால், அந்தப் பகுதியில் ஈக்கள், கொசுக்கள், எலிகள் அதிகரித்துவரும் நிலையில், நாடே அச்சத்தில் மூழ்கியுள்ள தொற்று நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் ஒருபுறம். இந்த துர்நாற்றத்தினால் நாய்கள் படையெடுத்து வருகின்றன. அந்த பகுதியில் சுற்றித் திரியும் பூனைகள், அந்த கழிவுப் பொருட்களை சாப்பிடுகின்றன. அப்போது கழிவுப் பொருட்களில் உள்ள நச்சுத்தன்மை நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது பூனைகளுக்கு செரிமான கோளாறு ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றன.
சிலவேளைகளில் பூனைகள் இறக்க நேரிடுகின்றன. குப்பைகளை வீசிவரும் குடியிருப்பாளர்களை குறைகூறுவதா? அல்லது குப்பைகளை துப்புரவு செய்யும் குத்தகையாளர்களைப் பார்த்து விரல் நீட்டுவதா? அல்லது இந்த அவல நிலையைப் பார்த்து மனம் நொந்து கொள்வதா?
எனவே, சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள், குப்பைகளை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =