சிமெண்ட் லோரி சரக்கு ரயிலை மோதியது!

0

சிமெண்ட் லோரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஒருவர் நேற்று இங்குள்ள வடக்கு துறைமுகத்தின் கிலோ மீட்டர் 2இல் அவசர அவசரமாக இருப்புப் பாதையைக் கடந்து சென்றதால் ஒரு லோகோமோட்டிவ் எனப்படும் சரக்கு ரயில் வண்டியால் மோதித் தள்ளப்பட்டார்.

ஆயினும் அவ்விபத்தில் அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. சம்பவத்தின்போது பிற்பகல் 2.08 மணியளவில், 43 வயதான சிமெண்ட் லோரி ஓட்டுநர், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. ரயில் நிலையத்தின் காவலரால் நிறுத்துமாறு கூறப்பட்ட போதிலும் அவர் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் லோரியை செலுத்தியிருக்கிறார்.

இது குறித்து பேசிய தென் கிள்ளான் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி ஆணையர் சம்சுல் அமர் ரம்லி, மோதல் காரணமாக ரயில் இயந்திரங்கள் விபத்துக்குள்ளான போதிலும் சிமெண்ட் லோரி ஓட்டுநர் உயிர் தப்பினார் என்றார்.

இந்த மோதலால் சம்பவ இடத்தில் சிமெண்ட் கொட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த வழக்கு ரயில்வே சட்டம் 1991இன் கீழ் மலேசிய ரயில்வே (கே.டி.எம்) விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here