சின் பெங் அஸ்தி விவகாரம் வேண்டுமென்றே அரசியலாக்கப்படுகிறது!

0

முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் (சிபிஎம்) தலைவர் சின் பெங்கின் அஸ்தி விவகாரம் வேண்டுமென்றே அரசியலாக்கப்படுகிறது என்று ‘ஹட்யாய்’ அமைதி ஒப்பந்த கூட்டணியின் தலைவர் இந்திராஜெயா அப்துல்லா கூறினார்.
பல இன மக்கள் வாழும் மலேசியாவில் மற்றவர்களின் கருத்துகளுக்கும் நடத்தைகளுக்கும் நாம் ஒத்துப்போக முடியாத பட்சத்தில் சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகும் என்று அவர் தெரிவித்தார்.
சின் பெங் அஸ்தி விவகாரத்தை அரசியலாக்குவதற்கு சில அரசியல்வாதிகள் விருப்பம் கொண்டுள்ளனர் என்று மலேசியா கினியிடம் அவர் கூறினார். இதனிடையே நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) ஹட்யாய் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி 30 வருடம் கடந்துவிட்டதையொட்டி நடந்த நினைவுநாள் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
தாய்லாந்தில் இது போன்ற பிரச்சினைகள் எழவே இல்லை. அத்தகைய பிரச்சினைகளில் அந்நாட்டில் எந்த பாரபட்சமும் காட்டப்படுவது கிடையாது.
இந்த நிகழ்வு தாய்லாந்தின் சொங்க்லா நகரில் உள்ள லீ கார்டன் தங்கு விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர்.
தாய்லாந்து செனட்டர்கள், முன்னாள் ராணுவத்தலைவர்கள், தாய்லாந்து – மலேசியாவைச் சேர்ந்த முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சி (சிபிஎம்) உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் இதில் கலந்து கொண்டவர்களில் அடங்குவர். அமைதி ஒப்பந்த நினைவுநாள் நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் ஹட்யாயில் நடைபெறுகிறது. 1989இல் மலாயா கம்யூனிஸ்டு கட்சி, தாய்லாந்து – மலேசியா அரசாங்கங்களுக்கிடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை நினைவூட்டும் வகையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அந்நினைவுநாள் தாய்லாந்தில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =