சின் பெங் அஸ்தி கொண்டுவரப்பட்டது பேரா அரசாங்கத்திற்குத் தெரியாது

0
PERAK 28-11-2018.Mentri Besar Datuk Seri Ahmad Faizal Azumu has brushed aside talks to topple him through a vote of no confidence in the current sitting of state assembly. Describing it as coffee shop talk, Ahmad Faizal (PH – Chenderiang) admitted there were attempts to remove him but it does not warrant him to comment.MALAYMAIL/Farhan Najib

முன்னாள் மலாயா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சின் பெங்கின் அஸ்தி இங்கு கொண்டுவரப்பட்டது பேரா அரசாங்கத்திற்கு தெரியாது என மாநில மந்திரி பெசார் அமாட் பைசால் அஸுமு கூறினார்.
இந்த சம்பவத்திற்கும் மாநில அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.சின் பெங்கின் அஸ்தி பேரா மாநிலத்துக்கு கொண்டுவரப்பட்ட சம்பவ பத்திரிகை செய்தியின் வாயிலாக தாம் தெரிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார். கடந்த செப்டம்பர் 16 தேதி சின் பெங்கின் அஸ்தி பேராவிற்கு கொண்டுவரப்பட்டு தித்தி வங்சா மலைத்தொடர் மற்றும் லுமுட் அருகே உள்ள கடலில் கரைக்கப்பட்டதாக அப்பத்திரிகை செய்தி கூறியிருந்தது.
“ஆகையால் என்னைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் மாநில அரசாங்கம் தலையிட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தப்படும்” என்றார் அவர்.
நாட்டிற்குள் சின் பெங்கிங் அஸ்தி கொண்டுவரப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு நபர்களை போலீஸ் அடையாளம் கண்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் கூறியுள்ளார். தாய்லாந்தில் நாடு கடந்து வாழ்ந்துவந்த சின் பெங் 2013ஆம் ஆண்டில் தமது 89வது வயதில் காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + fifteen =